Saturday 16 May 2015

சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை



     சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை (வீட்டில் செய்யும் சுலப முறை)
பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா?  அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.

                       


தேவையானவை

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன ஊதுபத்தி ஒரு பாக்கெட், தாமரை தண்டுத்திரி, அகல்விளக்கு, கலப்படமில்லாத பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்).
 இந்த வழிபாடு செய்ய ஒரே ஒரு கட்டுப்பாடுதான் உண்டு .அது இந்தவழிபாடு செய்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை  நிறுத்த வேண்டும்.
  
 இந்த பதிவிலிருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு,இந்தபூஜை முறையைப் பின்பற்றலாம்.

 அகல்விளக்கில்  நெய்யை நிரப்பி தாமரைநூல்  திரியை வைத்து தீபம்   ஏற்றிட வேண்டும்.அப்படி ஏற்றிவிட்டு,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானதுபிறகு,சந்தனத்தை சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும்,பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும்.அப்படி வைக்கும்போது,சந்தனம் பைரவர்,பைரவியின் கண்களை மறைக்கக் கூடாது;பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்தில் இதேபோல்,சந்தனத்தை வைக்க வேண்டும். பிறகு,சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும். அப்படி ஆராதித்தப்பின்னர், கீழ்க்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி :

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை  வித்மஹே
பைரவ்யை  தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்.


இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.


  1. ஸ்வர்ணப்ரத
  2. ஸ்வர்ணவர்ஷீ
  3. ஸ்வர்ணாகர்ஷண பைரவ
  4. பக்தப்ரிய
  5. பக்த வச்ய
  6. பக்தாபீஷ்ட பலப்ரத
  7. ஸித்தித
  8. கருணாமூர்த்தி
  9. பக்தாபீஷ்ட ப்ரபூரக
  10. நிதிஸித்திப்ரத
  11. ஸ்வர்ணா ஸித்தித
  12. ரசஸித்தித

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.

1 comment: