Thursday, 28 May 2015

ஆகாச கருடன் கிழங்கு


     
ஆகாச கருடன் கிழங்கு:
                                                              

                                            
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு. கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

இந்தக் கிழங்கை நஞ்சு முறிவிற்காக கொடுப்பர்.இதற்கு கொல்லன் கோவை,பேய்ச் சீந்தில் என்றும் அழைப்பர்.தாவரப் பெயர்:- BRYONIA EPIGOEA.

இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும்.இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ,பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.ஏனெனில் ஆகாயம் சிதம்பரம்.சிவனாகிய சிவன் அதனால்தான் அங்கே சிவ பாகமான வலது கால் தூக்கி ஆடுகிறான்.

விஷக்கடியை நீக்கும் ஆகாச கருடன் கிழங்கு:

 
      மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு உள்ளுக்குள் கொடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது

விஷக்கடியை குணமாக்க தேள் கொட்டினால்:
ஆகாச கருடன் கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்றால் தேள் விஷம் இறங்கும். அதனால் ஏற்பட்ட நெறிகட்டுதலும் நீங்கும். கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாக அரைத்து 50 மி.லி. தண்ணீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்ப்பூச்சாகவும் பூசி வர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும். கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து, ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு, உப்பு, புளி நீக்கி சாப்பிட பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

வாதநோய் குணமாகும்:
கிராம் கிழங்குப் பொடியை 100 மி.லி தண்ணீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட சீத பேதி தீரும். 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கீழ வாதத்துக்கு பத்துப்போட குணமாகும்.

சருமநோய்களை குணமாக்கும் தைலம் இக்கிழங்கில் இருந்து தைலம் இறக்குகின்றனர். இத்தைலத்தை மனிதர்களுக்கு வரும் சரும நோய்களுக்கு மேல்பூச்சாகப் போட ஆறும். கால்நடைகளுக்கு வரும் சரும நோய்களுக்கும் மேற்பூச்சாக பூச நோய்கள் குணமடையும்.
 

1 comment:

  1. ஆகாச கருடன் கிழங்கு தேவைக்கு அழைக்க 9994050807

    7373732760

    ReplyDelete